பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம். பாரதியின் அத்தனை பாடலகாளின் தொதுப்பு இது. தினம் தினம் அவரது பாடல்கள், கவிதைகள் வெளியிடப் படுகின்றன. கவிதை மொழிபெயர்ப்புகளும் உள்ளன. உங்கள் பிற மொழி நண்பர்களுக்கு பாரதியின் கவிதையை அறிமுகப் படுத்துங்கள். பாரதி கவி படிப்போம். அவரது புகழ் பரப்புவோம்
மாயையைப் பழித்தல்
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே - மனத்
திண்மையுள்ளாரை நீ
செய்வது மொன்றுண்டோ ! - மாயையே !
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே - நீசித்தத்
தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ ? - மாயையே!
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே ! - நான்உன்னைக்
கெடுப்ப துறுதியென்
றேயுணர் - மாயையே !
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே ! - இந்தத்தேகம்
பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய் ! - மாயையே !
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,
அற்ப மாயையே ! - தெளிந்தொருமை
கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ ? - மாயையே !
நீதரும் இன்பத்தை நேரென்று
கொள்வனோ மாயையே - சிங்கம்நாய்தரக்
கொள்ளுமோ நல்லர
சாட்சியை - மாயையே !
என்னிச்சை கொண்டுனை யெற்றி
விடவல்லேன் மாயையே ! - இனிஉன்னிச்சை
கொண்டெனக் கொன்றும்வராது
காண் - மாயையே !
யார்க்கும் குடியல்லேன்
யானென்பதோர்ந்தனன் மாயையே ! - உன்றன்போர்க்கஞ்சு
வேனோ பொடியாக்குவேன்
உன்னை - மாயையே !
Tiada ulasan:
Catat Ulasan
Nota: Hanya ahli blog ini sahaja yang boleh mencatat ulasan.